உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

 வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)மகரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: உழைப்பிற்கேற்ற லாபம் வரும். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம், தொழிலை விரிவு செய்வீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு மறைமுகத் தொல்லை ஏற்படும்.திருவோணம்: சனி பகவானால் எடுத்த வேலைகளை முடித்து  லாபம் காண்பீர். சுய தொழில் செய்வோருக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் சிறு சிறு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.அவிட்டம் 1,2: மனத்தெளிவு பிறக்கும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். குரு பார்வைகளால் தொழில் லாபம் தரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவு குறையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !