உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)மகரம்: சரபேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.உத்திராடம் 2,3,4: பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். சனிக்கிழமை அன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். சங்கடத்தை ஏற்படுத்திய பிரச்னை போராட்டம் விலகும். திருவோணம்: சனி சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழிலில் புதிய பாதை தெரியும். வியாபாரம், தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.அவிட்டம் 1,2: உங்கள் சுகாதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மை தரும். பெரிய அளவில் தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கூடும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !