உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

 வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)மகரம்: குலதெய்வத்தை வழிபட சங்கடங்கள் விலகும்.உத்திராடம் 2,3,4: எந்த ஒன்றிலும் நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும். செய்துவரும் தொழிலில் உங்களுடைய நேரடி கண்காணிப்பு அவசியம். உடல்நிலையில் சிறு சங்கடம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நன்மையாகும். சனிக்கிழமை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.திருவோணம்: எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஞாயிற்றுக்கிழமை வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.அவிட்டம் 1,2: சுக ஸ்தான செவ்வாயும் அஷ்டம கேதுவும் உடல்நிலையில் சங்கடங்களை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியத்தில்  கவனமாக இருப்பது நன்மையாகும். பெரிய அளவில் தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கூடும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திங்கள் கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.சந்திராஷ்டமம்: 23.5.2026 காலை 7:49 மணி - 25.5.2026 மதியம் 1:24 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !