வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)மகரம்: விநாயகரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிரி தொல்லை நீங்கும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சங்கடத்தை ஏற்படுத்திய பிரச்னை போராட்டம் விலகும். வருமானம் உயரும்.திருவோணம்: சனி, குருபகவான் இருவரும் உங்கள் வாழ்க்கை வளமாகும். நினைத்த காரியம் நடக்கும். அந்தஸ்தும் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அவிட்டம் 1,2:உங்கள் சுகாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர். பெரிய அளவில் தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கூடும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உடல்நிலையில் கவனம் தேவை.