வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் (5.6.2026 - 11.6.2026)மகரம்: சிவபெருமானை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: பூர்வ புண்ணிய ஸ்தான சூரியனால் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வருமானம் உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.திருவோணம்: குருவும் சனியும் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவர். வியாபாரம், தொழிலை லாபமடைய வைப்பர். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பர்.அவிட்டம் 1,2: தைரிய வீரியகாரகன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும்.புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபம் தரும். பெரிய அளவில் தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.