உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

 வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )மகரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: திங்கள் முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.திருவோணம்: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பட்டம் பதவி தேடி வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.அவிட்டம் 1,2: உங்கள் சுகாதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலை நடக்கும். எடுத்த செயல் வெற்றியாகும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !