வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )மகரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: ஆறாமிட சூரியன் திறமையை அதிகரிப்பார். ஆரோக்கியமாக நடைபோட வைப்பார். வம்பு வழக்குகளையும் இல்லாமல் செய்வார். அரசு வழி முயற்சிகளை சாதகமாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். வெள்ளி அன்று வேலைகளில் கவனம் தேவை.திருவோணம்: செல்வாக்கு உயரும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவு பெருகும். தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சனிக்கிழமை அன்று திட்டமிடுவது அவசியம்.அவிட்டம் 1,2: உங்கள் சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சட்ட சிக்கல் முடியும். எடுத்த வேலை வெற்றியாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி பலிக்கும். ஞாயிறு அன்று புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 19.6.2026 மதியம் 3:58 மணி - 21.6.2026 இரவு 9:17 மணி