உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)மகரம்: விநாயகரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வருமானம் உயரும்.திருவோணம்: நன்மையான வாரமிது. சகாய சனி, சப்தம குருவால் வாழ்க்கை வளமாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தொழில் லாபம் அடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: அனைத்திலும் கவனமும் நிதானமும் தேவை. புதிய இடம் வீடு வாங்குவோர் மூல பத்திரத்தைப் பார்ப்பது அவசியம். சட்ட சிக்கல்கள் உள்ளவற்றில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் மார்க்கெட் நிலவரம் அறிந்து அதற்கேற்ப கொள்முதலில் ஈடுபடுவது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !