உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் (7.8.2026 - 13.8.2026)மகரம்:காளியை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4:சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் சிலருக்கு இடமாற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். வியாபாரிகள் தொழிலை விரிவு செய்வீர்.வருமானத்தில் கவனம் செல்லும். வியாழன் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.திருவோணம்: சப்தம குருவால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பட்டம் பதவி தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.அவிட்டம் 1,2: செவ்வாய் பகவானால் தைரியம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். எடுத்த வேலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும்.  சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தொழில் லாபம் தரும். இழுபறி வழக்கு சாதகமாகும்.சந்திராஷ்டமம்: 13.8.2026 காலை 8:08 மணி - 15.8.2026 மதியம் 1:02 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !