வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் (14.8.2026 - 20.8.2026)மகரம்: காளத்தீஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசுவழி வேலை வெற்றியாகும். அதன்பின் சட்ட ரீதியாக சில பிரச்சனை ஏற்படும். கணக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.திருவோணம்: குருவால் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வெள்ளி அன்று நிதானம் தேவை.அவிட்டம் 1,2: செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலை சீராகும். சட்ட சிக்கல் முடியும். எடுத்த வேலை வெற்றியாகும். சிலருக்கு தடைபட்ட பதவிஉயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சனிக்கிழமை புதிய முயற்சிகளையும் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 13.8.2026 காலை 8:08 மணி - 15.8.2026 மதியம் 1:02 மணி