வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் (4.9.2026 - 10.9.2026)மகரம்: குலதெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், கேதுவும் சங்கடத்தை அதிகரிப்பர். தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கி நெருக்கடிக்கு ஆளாக்குவர். அரசு வழியிலும் நிம்மதியற்ற நிலை உருவாகும். ஆனாலும் அனைத்தையும் சமாளிக்கும் சக்தி உங்களுக்கு இருக்கும்.திருவோணம்: சப்தம குரு, ஆறாமிட செவ்வாயால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். செலவு பலவகையில் ஏற்படும். மறதியால் சில வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது அவசியம்.அவிட்டம் 1,2: தைரியம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். எடுத்த வேலை வெற்றியாகும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். தொழில் லாபம் தரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். கையில் பணம் புரளும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.சந்திராஷ்டமம்: 9.9.2026 மாலை 4:05 மணி - 11.9.2026 இரவு 8:45 மணி