வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )மகரம்: நடராஜரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரி ஆலோசனையை ஏற்பது அவசியம். அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்படுவது நல்லது. வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வதால் அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.திருவோணம்: சப்தம குருவால் உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாபாரிகளுக்கு தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.அவிட்டம் 1,2: செல்வாக்கு உயரும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எடுத்த வேலை வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். வெள்ளிக்கிழமை உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் அனைத்திலும் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 9.9.2026 மாலை 4:05 மணி - 11.9.2026 இரவு 8:45 மணி