வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் (20.11.2026 - 26.11.2026)மிதுனம்:சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4:சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.திருவாதிரை: அஷ்டம ஸ்தானத்தில் ராகு, குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நிதானமாக செயல்படுவது நன்மையளிக்கும். மறைமுகத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவதும் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும் நன்மையளிக்கும். உடல்நிலையிலும் வார்த்தையிலும் கவனம் தேவை.புனர்பூசம் 1,2,3: குருப் பார்வைகளால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனை விலகும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் தொழில் லாபம் தரும்.