உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)மிதுனம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய், கேதுவால் எடுத்த வேலைகளை முடித்து லாபம் அடைவீர். தொழிலில் வருமானம் கூடும். ராசிநாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் புதிய முயற்சியில் கவனம் தேவை.திருவாதிரை: ராகுவால் செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். குரு பார்வைகளால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாசல் என்ற கனவு நனவாகும்.புனர்பூசம் 1,2,3: ஜென்ம குரு ஞாயிற்றுக்கிழமை முதல் அலைச்சலை அதிகரிப்பார். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை ஏற்படுத்துவார். ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வசிக்க வேண்டிய நிலை உருவாகும். திருமணவயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் ஏக்கம் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !