உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன்  3.10.2025 - 9.10.2025மிதுனம்: நரசிம்மரை வழிபட வாழ்க்கை வளமாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாயும், புதனும் குரு பார்வையுடன் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். நினைத்த செயல் நடக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.திருவாதிரை: குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் ராகுவால் தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். புனர்பூசம் 1,2,3: குருவின் பார்வைகளால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செய்யும் முயற்சி சாதகமாகும். கையில் பணம் புரளும். வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 1.10.2025 மதியம் 12:07 மணி - 3.10.2025 இரவு 7:24 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !