உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)மிதுனம்: ஆண்டாள் அழகரை வழிபட நினைத்த வேலை நடக்கும்.மிருகசீரிடம் 3,4: சத்ரு ஜெய ஸ்தானத்தில் குரு பார்வையுடன் ஆட்சியாக சஞ்சரிக்கும் செவ்வாய் எடுக்கும் வேலைகளில் லாபத்தை உண்டாக்குவார். பொன் பொருள் பூமி என்று வாங்கிட வைப்பார். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.திருவாதிரை: ராகுவும் கேதுவும் முயற்சிகளை வெற்றியாக்குவர். பணப் புழக்கத்தை அதிகரிப்பர். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவர்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: குரு பகவானால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். இழுபறி வேலை முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத் தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !