உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் (14.11.2025 - 20.11.2025)மிதுனம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட நெருக்கடி நீங்கும். நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய் பகவானால் நினைத்ததை சாதிப்பீர். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.திருவாதிரை: திங்கள் முதல் சனி வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அங்கு சஞ்சரிக்கும் ராகுவும், மூன்றாமிட கேதுவும் செல்வாக்கை உயர்த்துவர். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.புனர்பூசம் 1,2,3: தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !