/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் (12.12.2025 - 18.12.2025)மிதுனம்: லட்சுமி நரசிம்மரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய் நெருக்கடியை ஏற்படுத்துவார் என்றாலும், திங்கள் வரை சூரியனால் நினைத்ததை சாதிப்பீர். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும்.திருவாதிரை: சனி, ராகு, கேது என மூவரும் செல்வாக்கை உயர்த்துவர். முயற்சிகளை வெற்றியாக்குவர். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும்.புனர்பூசம் 1,2,3: வாழ்வில் வளம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வேலையில் மாற்றம் வரும்.