உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

 வார பலன் (26.12.2025 – 1.1.2026)மிதுனம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.மிருகசீரிடம் 3,4: கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ஆரோக்யம் சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். திருவாதிரை: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் சனியும் உங்கள் நிலையை உயர்த்துவர். பெரியோர் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் இடம், வீடு வாங்குவீர். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும்.புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் குரு வக்ரமாக சஞ்சரித்தாலும் சனி, ராகு, கேது சஞ்சாரங்கள் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்திற்குள் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !