/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் ( 9.1.2026 - 15.1.2026 ) மிதுனம்: திருவிக்ரமனை வழிபட நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய் பகவானால் விழிப்புணர்வுடன் செயல்படுவீர். இதனால் வாழ்வில் நல்லது நடக்கும். ஒருசிலருக்கு வம்பு வழக்கு வந்து சேரலாம். எதிர்பாலினரால் உங்களையும் அறியாமல் சில சங்கடங்களுக்கு ஆளாக நேரும்.திருவாதிரை: பாக்ய சனியும் ராகுவும் உங்கள் வேலைகளை வெற்றியாக்குவர். பணப் புழக்கத்தை அதிகரிப்பர். வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவர். புதிய சொத்து வாகனம் என்ற கனவை நனவாக்குவர்.புனர்பூசம் 1,2,3: எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.