வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் (23.1.2026 - 29.1.2026)மிதுனம்: உலகளந்தப் பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.மிருகசீரிடம் 3,4: ராகு, கேது, சனி சஞ்சாரம் சாதகமாக உள்ளனர். அதனால் எந்தநிலையையும் எதிர் கொண்டு வெற்றியடைவீர். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலை முழுமை அடையும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.திருவாதிரை: பாக்ய ஸ்தானம் பலம் பெற்றுள்ளது. புதன் பகவானும் சாதகமாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். வராது என்ற பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நல்லது. புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் குரு வக்ரம். சனி, ராகு, கேது, புதன் சாதகத்தால் செல்வாக்கு உயரும். விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அரசு பணியில் இருப்பவர்கள் கோபத்திற்கோ ஆசைக்கோ இடம் கொடுக்க வேண்டாம்.