/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் (30.1.2026 - 5.2.2026)மிதுனம்: வீர ராகவப் பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். ஒரு சிலருக்கு வம்பு வழக்கு என காவல்நிலையம் செல்லக்கூடிய நிலை இருப்பதால் கவனம் தேவை. வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. திருவாதிரை: பாக்ய சனி ராகுவால் வேலை வெற்றியாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய சொத்து வாகனம் என்று சேரும். வீட்டில் சுபிட்சமான நிலை உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: குருவால் வாழ்க்கை வளமாகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கேதுவால் எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.