வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)மிதுனம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். எடுக்கும் வேலை இழுபறியாகும். வியாபாரிகளுக்கு அரசு வழியில் நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலர் வம்பு வழக்கு என்று காவல் நிலையம் செல்லக்கூடிய நிலை ஏற்படும்.திருவாதிரை: பாக்ய சனியும் ராகுவும் உங்கள் வேலைகளை வெற்றியாக்குவர். பணப்புழக்கத்தை அதிகரிப்பர். வெளிநாட்டு முயற்சியை சாதகமாக்குவர். புதிய சொத்து வாகனம் என்ற கனவை நனவாக்குவர். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் செலவு அதிகரிக்கும். அலைச்சலும் வேலைபளுவும் கூடும். சில வேலைகளை முடிக்க முடியாமல் போகும். சூரியன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் அரசு பணியாளர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.