வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் (13.2.2026 - 19.2.2026)மிதுனம்: நவக்கிரகங்களை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். தொழில், வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். உழைப்பு அதிகரித்தாலும் எண்ணம் நிறைவேறும். ஞாயிறு அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.திருவாதிரை: ராகு பகவானால் வாய்ப்பு தேடிவரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். ஞாயிறு, திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.புனர்பூசம் 1,2,3: கேது, சனி, ராகு, சுக்கிரன் என உங்களுக்கு யோகத்தை உண்டாக்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். திங்கள், செவ்வாய் அன்று அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 15.2.2026 அதிகாலை 1:31 மணி - 17.2.2026 காலை 10:04 மணி