/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )மிதுனம்: குலதெய்வத்தை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீடு மேற்கொள்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது.திருவாதிரை: பாக்ய ஸ்தானம் பலமடைவதால் வேலை வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாய் பகவானால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். மேலதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவது நல்லது.