உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)மிதுனம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாயால் குரு மங்கள யோகம் உண்டாகும். எடுத்த காரியம் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை உயரும்.திருவாதிரை: உங்கள் செல்வாக்கு உயரும் நேரமிது. அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வெளி நாட்டில் கேள்விக்குறியுடன் வாழ்பவர்களுக்கு நிம்மதி உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். வராது என நினைத்த பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நடக்காது என கை விட்ட வேலையால்  லாபம் காண்பீர். அரசு வழி முயற்சி சாதகமாகும். வேலைக்காக முயற்சித்வர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !