உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)மிதுனம்: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீடு மேற்கொள்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம், உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் ஏற்படாமல் போகும்.திருவாதிரை: பாக்ய ஸ்தான ராகுவிற்கு குருபார்வை கிடைப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு அலைச்சலை அதிகரித்தாலும் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார், திருமண வயதினருக்கு வரன் வரும், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !