உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் (17.4.2026 - 23.4.2026)மிதுனம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய் சனியுடன் ராசிநாதன் புதன் சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.திருவாதிரை: லாப ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதுடன் சகாய ஸ்தானத்தில் கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும், இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவினால் பொன்னும் பொருளும் சேரும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !