/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)மிதுனம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய் சனி, புதன் ஆகியோரால் பணத் தட்டுப்பாடு விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: லாப ஸ்தானத்தில் சூரியன், சகாய ஸ்தானத்தில் கேது என சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.புனர்பூசம் 1,2,3: குரு பகவான் அலைச்சலை அதிகரித்தாலும் வருமானத்திற்கும் வழி அமைப்பார். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சும் நிலைக்கு உயருவர்.