உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் (1.5.2026 - 7.5.2026)மிதுனம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4:  நெருக்கடி நீங்கும் வாரம். செய்து வரும் தொழில் வளர்ச்சி அடையும். பணத் தட்டுப்பாடு விலகும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்.திருவாதிரை: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.புனர்பூசம் 1,2,3: மனக்குழப்பம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு திருமணம் முடிவாகும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !