உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)மிதுனம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். கையில் பணம் புரளும். தொழில் முன்னேற்றம் அடையும்.திருவாதிரை: கேதுவும் ராகுவும் உங்களை உயர்த்துவர். தலை நிமிர்ந்து நடை போட வைப்பர். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: ஜென்ம குருவின் பார்வைகளால் பொன்னும் பொருளும் சேரும், சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன்வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !