/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)மிதுனம்: சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.மிருகசீரிடம் 3,4: பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.திருவாதிரை: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். பொன்னும் பொருளும் சேரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன்வரும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.