வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)மிதுனம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது அவசியம்.திருவாதிரை: ராகுவும் கேதுவும் துணிச்சலை தருவர். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். அதிகாரிகளுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: குருவும் அவருடைய பார்வையும் உங்கள் வாழ்வை வளமாக்கும். சனி பகவானால் ஏற்பட்ட சங்கடம் இல்லாமல் போகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். அதிர்ஷ்ட வாய்ப்புகளால் நிலை உயரும். பொன்னும் பொருளும் சேரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: 4.6.2026 காலை 6:42 மணி - 6.6.2026 மாலை 4:16 மணி