உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)மிதுனம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். நேற்று எதிர்பார்த்த பணம் வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறி வேலை முடியும்.திருவாதிரை: உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். துணிச்சலுடன் செயல்படத் தொடங்குவீர். குருப் பார்வை பத்தாமிட சனிக்கு கிடைப்பதால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: தன குடும்ப ஸ்தான குருவால் உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புரளும். பழைய கடன் அடைபடும். சனி பகவானால் ஏற்பட்ட சங்கடம் இல்லாமல் போகும்.சந்திராஷ்டமம்: 4.6.2026 காலை 6:42 மணி - 6.6.2026 மாலை 4:16 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !