/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )மிதுனம்: வெங்கடாஜலபதியை வழிபட நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த பணம் வரும். தொழில் வளர்ச்சி அடையும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிக்கு குருப் பார்வை உண்டாவதால் வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.திருவாதிரை: கேதுவும் ராகுவும் துணிச்சலுடன் நடைபோட வைப்பர். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.புனர்பூசம் 1,2,3: குருவினால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும். கையில் பணம் புரளும். உடல் நிலை சீராகும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும். வழக்கு சாதகமாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.