வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )மிதுனம்: ஹயக்ரீவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். குரு பகவானால் எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதன் அன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.திருவாதிரை: கேது ராகு துணிச்சலை அதிகரிப்பர். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.புனர்பூசம் 1,2,3: குருவும் அவருடைய பார்வையும் வாழ்வை வளமாக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய பொருட்கள் சேரும். சனி பகவானால் ஏற்பட்ட சங்கடம் இடம் தெரியாமல் போகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவு அடையும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பொன்னும் பொருளும் சேரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: 1.7.2026 மதியம் 2:10 மணி - 3.7.2026 இரவு 12:00 மணி