வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் (7.8.2026 - 13.8.2026)மிதுனம்: ஏழுமலையானை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.மிருகசீரிடம் 3,4: ஜென்ம ராசிக்குள் லாபாதிபதி சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் விலகும். தைரியமாக வேகமாக செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.திருவாதிரை: எடுத்த வேலையில் உறுதியாக இருப்பீர். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: குருவால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். உடல் நிலை சீராகும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.