வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் (28.8.2026 - 3.9.2026)மிதுனம்:கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4:ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும். யோசித்து செயல்படுவது நன்மையளிக்கும். திருவாதிரை:பாக்ய ராகுவும் சகாய சூரியன் கேதுவும் உங்கள் முயற்சியை வெற்றியாக்குவர். கடந்த வாரம் இருந்த நெருக்கடிகள் நீங்கும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும்.புனர்பூசம் 1,2,3:தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும். நோய்நொடி விலகும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.