உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )மிதுனம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: உங்கள் செயல்களில் வழக்கத்தை விட கூடுதல் வேகம் இருக்கும். இழுபறியாக இருந்த வேலையை முடிக்க முடியும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.திருவாதிரை:அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். உடன் பணிபுரிபவருடன் இணக்கமான நிலை உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: குரு சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் நிலை சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். கையில் பணம் புரளும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !