உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் (25.9.2026 - 1.10.2026)மிதுனம்: வீரராகவப் பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செயல்களில் தடுமாற்றம் குழப்பம் ஏற்படும். வழக்கமாக இருக்கும் வேகமும் காணாமல் போகும். யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். யோசித்து செயல்படுவது நன்மை தரும். திருவாதிரை: ராகுவும் கேதுவும் முயற்சியை வெற்றியாக்குவர். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: செல்வாக்கு உயரும். பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நோய் விலகும். வழக்கு முடியும். வாய்ப்பு தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் லாபம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !