உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

  வார பலன் (16.10.2026 - 22.10.2026 )மிதுனம்: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய் நீச்சத்தால் பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. முடிந்த வரை குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், அனுசரித்துச் செல்வதும் நன்மை அளிக்கும். ஞாயிறு திங்களில் அனைத்திலும் நிதானம் தேவை.திருவாதிரை: கேதுவும் ராகுவும் உங்கள் முயற்சியை வெற்றியாக்குவர். பெரியோர் ஆதரவு கிடைக்கும். குடும்பம், தொழில், வேலையில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னை விலகும். வருமானம் அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். திங்கள் செவ்வாயில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.புனர்பூசம் 1,2,3: குரு பார்வை குடும்பத்தில் நிம்மதியை தரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்பு, போட்டி, பகை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.சந்திராஷ்டமம்: 18.10.2026 இரவு 7:04 மணி - 21.10.2026 அதிகாலை 5:45 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !