உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )மிதுனம்: வேங்கடவனை வழிபட வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: வருமானத்தில் கவனம் வேண்டும். விளைந்த பொருள் வீடு வரும் வரை பார்வை அதன் மீது இருக்க வேண்டும். சிலரை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. திருவாதிரை உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். நம்பிக்கை அதிகரிக்கும். உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வரவேண்டிய பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். புனர்பூசம் 1,2,3: வருமானம் அதிகரிக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கையில் பணம் புரளும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !