/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன்( 31.7.2026 - 6.8.2026)துலாம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: வியாபாரம் தொழிலில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சியில் தடை உண்டாக வாய்ப்பு இருப்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோரின் உதவியும் குலதெய்வ வழிபாடும் உங்களைப் பாதுகாக்கும்.சுவாதி: ராகு மனதளவில் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவார். லாப கேதுவும், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனும் உங்கள் உயர்வுக்கு வழிகாட்டுவர். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி லாபம் தரும்.விசாகம் 1,2,3: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசு வழி வேலை சாதகமாகும்.