உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் (6.6.2025 - 12.6.2025)துலாம்: ஆண்டாள் அழகரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை 3,4: லாப ஸ்தானத்தில் கேதுவுடன் செவ்வாய் இணைவதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும்.சுவாதி: ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி ராகுவிற்கு குருப்பார்வை உண்டாவதால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ராசிக்கு குருப்பார்வை உண்டாவதால் நிலை உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பணவரவை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !