வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் (15.8.2025 - 21.8.2025)துலாம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.சித்திரை 3,4: செவ்வாய் பகவானால் செலவு அதிகரிக்கும். சூரியன் கேதுவால் நினைத்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். அரசுவழி வேலை லாபம் தரும். சனிக்கிழமை அனைத்திலும் கவனம் தேவை.சுவாதி: குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஞாயிறு அன்று நிதானமாக செயல்படுவது நல்லது.விசாகம் 1,2,3: பாக்ய குருவும், ஜீவன, லாப சூரியனும், லாப கேதுவும் கனவுகளை நனவாக்குவர். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் பூர்த்தியாகும். திங்கள் கிழமை புதிய முயற்சி வேண்டாம்.சந்திராஷ்டமம்: 16.8.2025 மதியம் 2:01 மணி - 18.8.2025 மாலை 4:36 மணி