/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் 17.10.2025 - 23.10.2025துலாம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட நினைத்த வேலை நடக்கும்.சித்திரை 3,4: ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் வேலைகளில் கவனக்குறைவு ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை முடிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு எதிராக மாறும். ராசிநாதன் சுக்கிரன் பண வரவை அதிகரிப்பார்.சுவாதி: ராகு நெருக்கடியை தந்தாலும் கேது வருமானத்தை வழங்குவார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பெரியோர் ஆதரவுடன் வேலைகளை வெற்றியடைய வைப்பார். உறவினர் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பார்.விசாகம் 1,2,3: குருவினால் வேலையில் நெருக்கடி ஏற்படும். வியாபாரத்தில் உள்ள எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அவருடைய பார்வையால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.