உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )துலாம்: வீரராகவ பெருமாளை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை 3,4: செவ்வாய் பகவானுக்கு குரு பார்வை கிடைப்பதால் நினைத்ததை சாதிப்பீர். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தொழிலில் முன்னேற்றம் அடையும். பண நெருக்கடி நீங்கும். அனைத்திலும் பொறுமை காப்பது நன்மையாகும்.சுவாதி: பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னைகளை உண்டாக்குவார். குடும்பத்தில் நெருக்கடியை அதிகரிப்பார். எடுக்கும் வேலைகளை இழுபறியாக்குவார். லாப கேதுவால் தொழிலில் லாபம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: குரு உத்தியோகத்தில் நெருக்கடியை ஏற்படுத்துவார். அவருடைய பார்வைகளால் உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்கும். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும்.சந்திராஷ்டமம்: 6.11.2025 மதியம் 2:15 மணி - 8.11.2025 மாலை 4:39 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !