வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )துலாம்: அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை 3,4: குடும்பாதிபதி செவ்வாய், லாபாதிபதி சூரியன், ராசியாதிபதி சுக்கிரன் ஆகியோர் எடுத்த வேலை எல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியம் நடக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.சுவாதி: பூர்வீக சொத்திலும், பிள்ளைகள் வழியாகவும் நெருக்கடி ஏற்பட்டாலும், வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் உயரும். மாணவர்கள் இந்த நேரத்தில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.விசாகம் 1,2,3: உங்கள் வேலை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். லாப கேதுவால் பொருளாதார நிலை உயரும். கையில் பணம் புழங்கும். நெருக்கடி நீங்கும்.