/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் ( 9.1.2026 - 15.1.2026 ) துலாம்: மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும். நன்மை நடக்கும். சித்திரை 3,4: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும்.சுவாதி: ஐந்தாமிட ராகுவால் குடும்பத்தில் சச்சரவு நெருக்கடி என்று ஏற்பட்டாலும் லாப ஸ்தான கேதுவால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.விசாகம் 1,2,3: ராசிநாதன் சுக்கிரன், லாப கேது, லாப ஸ்தானாதிபதி சூரியன், குடும்பாதிபதி செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.