/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் (16.1.2026 - 22.1.2026)துலாம்: மருந்தீஸ்வரரை வழிபட மனக்கவலை விலகும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை 3,4: உங்கள் குடும்பாதிபதி செவ்வாயும் லாபாதிபதி சூரியனும் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் பதட்டம் ஏற்படும். திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். நிதானம் அவசியம்.சுவாதி: பூர்வீக சொத்திலும், பிள்ளைகளாலும் நெருக்கடி ஏற்பட்டாலும், லாப கேதுவால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகும். விருப்பம் பூர்த்தியாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.விசாகம் 1,2,3: இந்த வாரத்தில் வேலை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வது நல்லது. வேலையில் இருப்பவர் அதிகாரியை அனுசரித்துச் செல்வதால் நல்லது. ஒரு சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும்.